Saturday, 31 January 2015

Birth and Death certificate online for free


இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.
இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -
http://www.chennaicorporation.gov.in/o…/birthCertificate.do…
உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/…/birthCertificateList…
உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateBasi…
உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateList…
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php…
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php…
மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி ஆட்களுக்கு - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் - http://tirunelvelicorp.tn.gov.in/download.html

ration card

ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது
இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!....
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக :-
PDS 01 BE014
என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவசியம் நண்பர்களுக்கு பகிரவும் .